- மற்றும் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு
- நம்பியூர்
- அரசு கலைகள்
- விஞ்ஞானம்
- கல்லூரி
- கோபி?. திருக்குறள்
- அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
- தமிழுமணி
- யூனுஸ்
- வணிக நிர்வாகத் திணைக்களம்
கோபி,டிச.20: கோபி அருகே நம்பியூரில் செயல்பட்டு வரும் அரசு கலை அறிவியல் கல்லூரியில் போதை பொருள் தடுப்பு மற்றும் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு பயிலரங்கம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் (பொறுப்பு) தமிழ்மணி தலைமை தாங்கினார்.வணிக நிர்வாகவியல் துறை தலைவர் யூனூஸ் வாழ்த்தி பேசினார். நிகழ்ச்சியில் மனநல மருத்துவர் டாக்டர் பிரனேஸ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, போதை பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் தற்கொலைக்கான காரணங்கள் மற்றும் தீர்வுகளை விளக்கினார்.
அதைத்தொடர்ந்து ஈரோடு மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி சங்கீதா,காணொலி காட்சி மூலமாக புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் மற்றும் தீர்வுகள் குறித்து விளக்கினார். தமிழ்த்துறை ஆசிரியர்கள் சரஸ்வதி, மகேந்திரன்,நிஷாந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக தமிழ்த்துறை விரிவுரையாளர் சரஸ்வதி வரவேற்றார். முடிவில் ஒய்ஆர்சி ஒருங்கிணைப்பாளர் தீபலட்சுமி நன்றி கூறினார்.
