×

கனிமொழி எம்பி குறித்து அவதூறு பாஜ பிரமுகர் கைது

திருப்பரங்குன்றம்: மதுரை, திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று கோரி, ஐகோர்ட் கிளை வழிகாட்டுதலின்படி கடந்த டிச. 13ம் தேதி திருப்பரங்குன்றம் மயில் மண்டபம் அருகே கிராம மக்கள் பங்கேற்ற உண்ணாவிரதம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற முன்னாள் பாஜ நிர்வாகி கார்மேகம் (65) ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்தபோது, தூத்துக்குடி திமுக எம்பி கனிமொழி குறித்து அவதூறாக பேசியதாக தெரிகிறது. கார்மேகம் பேசும் வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து திருப்பரங்குன்றம் பகுதி திமுக செயலாளர் கிருஷ்ணபாண்டியன் அளித்த புகாரின் பேரில் போலீசார் கார்மேகம் மீது அவதூறு பரப்புதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர்.

Tags : BAJA PRAMUGUR ,KANIMOZHI ,Madurai ,Thiruparangundaram ,Aycourt ,Mail Hall ,Thirupparangunram ,
× RELATED பொள்ளாச்சியில் பரபரப்பு போதை...