×

போக்சோவில் வாலிபர் கைது

 

மதுரை, டிச. 10: மதுரை திருப்பரங்குன்றம் மகளிர் ஊர்நல அலுவலர் பத்மாவிற்கு இவருக்கு அனுப்பானடி ஆரம்ப சுகாதாரநிலையத்தில் இருந்து கர்ப்பமான 17 வயது சிறுமி அனுமதிக்கப்பட்டுள்ளதாக 1098 என்ற எண்ணில் தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் இது குறித்து விசாரணை நடத்தினார். விசாரணையில் மதுரையில் உள்ள ஒரு பகுதியை சேர்ந்த முத்துப்பாண்டி(29) என்பவர் உறவினரான சிறுமியை காதலித்து வந்துள்ளார்.

இதனை மருதுபாண்டியின் தாய் கண்டித்ததால், இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி கடந்த 8.6.2025ல் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு கோயிலில் வைத்து திருமணம் முடித்துக்கொண்டது தெரியவந்தது. இதனையடுத்து, மதுரை அனைத்து மகளிர் போலீசில் பத்மா அளித்த புகாரின் பேரில் முத்துப்பாண்டி போக்சோ வழக்கு பதிந்து கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

 

Tags : POCSO ,Madurai ,Madurai Thiruparankundram ,Women's ,Village Health Officer ,Padma ,Anupanadi Primary Health Center ,
× RELATED சேலம் விமான நிலையத்தில் தடையில்லாத போக்குவரத்து