×

வந்தே மாதரம் பாடலை பயன்படுத்தி பாகுபாட்டை உருவாக்கினார்கள் : திமுக எம்.பி.ஆ.ராசா உரை

டெல்லி : பிரிவினை குறித்து கூறும் பிரதமர், அது எங்கே உள்ளது? யாரிடம் உள்ளது என்பதை விளக்க வேண்டும் என்று திமுக எம்.பி.ஆ.ராசா தெரிவித்துள்ளார். மக்களவையில் வந்தே மாதரம் பாடலின் 150ம் ஆண்டு நிறைவு சிறப்பு விவாதத்தின் மீது பேசிய திமுக எம்.பி. ஆ.ராசா,”இந்தியாவில்தான் தேசிய கீதம், தேசிய பாடல் என்று தனித்தனியாக இருக்கின்றன.தேசிய கீதம் நமது நாட்டை ஒருங்கிணைக்கிறது. வந்தே மாதரம் நமது சுதந்திரத்தைப் பற்றியது; அதன் தாக்கத்தைப் பற்றியது. வந்தே மாதரம் பாடலை பயன்படுத்தி பாகுபாட்டை உருவாக்கினார்கள்.

சுதேசி போராட்டத்தில் இஸ்லாமியர்கள் கலந்துகொள்ளக் கூடாது என்று தடுக்கப்பட்டார்கள். வகுப்புவாதம் என்பது இஸ்லாமியர்களால் தூண்டப்படவில்லை. பிரிவினை குறித்து கூறும் பிரதமர், அது எங்கே உள்ளது? யாரிடம் உள்ளது என்பதை விளக்க வேண்டும். வந்தே மாதரம் பாடல் ஆங்கிலேயர்களுக்கு எதிராக மட்டும் பயன்படுத்தப்படவில்லை. பிரிவுபட்டிருந்த நாட்டை ஒருங்கிணைக்க தேசிய கீதம் தேவைப்பட்டது. வந்தே மாதரத்தை தற்போதைய வடிவில் ஏற்றுக்கொள்ள எதிர்க்கட்சிகள் தயாராக உள்ளோம். வந்தே மாதரத்தை எழுதிய பங்கிம் சந்திர சாட்டர்ஜிக்கு எவ்வாறு அரசியல் ஆக்கப்படும் என தெரிந்திருக்காது,”இவ்வாறு தெரிவித்தார்.

Tags : Dimuka M. B. ,Raza ,Delhi ,Raisa ,Malakawaya ,Dimuka ,
× RELATED தமிழ்நாட்டுக்கு டிசம்பர் மாதத்திற்கு...