×

உயர்நீதிமன்றம் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை பதவிநீக்கம் செய்யக்கோரி நாடாளுமன்றத்தில் இம்பீச்மென்ட் தீர்மானம்..!!

மதுரை: உயர்நீதிமன்றம் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை பதவிநீக்கம் செய்யக்கோரி நாடாளுமன்றத்தில் இம்பீச்மென்ட் தீர்மானம் கொண்டுவர தேவையான நடவடிக்கைகளை திமுக உள்ளிட்ட இந்திய கூட்டணி காட்சிகள் தொடங்கியுள்ளனர். ஆண்டு தோறும் கார்த்திகை தீப தினத்தன்று திருப்பரங்குன்றம் மலை உச்சிப் பிள்ளையார் கோயிலின் தீபத் தூணில் தீபம் ஏற்றப்படும். ஆனால் இந்த ஆண்டு கார்த்திகை தீபம் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் ஏற்ற அனுமதிக்குமாறு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் இந்து தமிழர் கட்சியின் ராமா ரவிக்குமார் என்பவர் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் கார்த்திகை தீபத்தன்று திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்டார்.

இதனால் திருப்பரங்குன்றத்தில் தேவையில்லாத சமூகப் பதற்றம் ஏற்படும் சூழல் உருவானது. இதனை அடுத்து நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த நிலையில், உயர்நீதிமன்றம் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்யும் இம்பீச்மென்ட் தீர்மானம் நாடாளுமன்றத்தில் கொண்டுவர திமுக உள்ளிட்ட இந்திய கூட்டணி கட்சிகள் முடிவு செய்துள்ளனர். இதன்படி இம்பீச்மென்ட் தீர்மானத்தை தாக்கல் செய்வதற்கு தேவையான எம்.பி.க்களின் கையெழுத்தை பெரும் நடவடிக்கையை இந்திய கூட்டணி காட்சிகள் நிர்வாகிகள் தொடங்கியுள்ளனர்.

Tags : G.R. ,Swaminathan ,Madurai ,DMK ,G.R. Swaminathan ,Karthigai ,Deepam ,Thiruparankundram ,Uchip Pillayar temple ,
× RELATED பொள்ளாச்சி, ஆனைமலை சுற்றுவட்டார...