உலாஊத்தங்கரை, டிச.8: ஊத்தங்கரையில் உள்ள ஐயப்ப சுவாமி கோயிலில் 18ம் ஆண்டு ஆண்டு விழா மற்றும் விநாயகர், ஐயப்ப சுவாமி, முருகர் உற்சவ மூர்த்திகள் திருவீதி உலா நடைபெற்றது. அதிகாலை 4 மணிக்கு உற்சவ மூர்த்திகளுக்கு கண் திறப்பு நிகழ்ச்சியும், கணபதி ஹோமம், 108 சங்காபிஷேகம், சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. உற்சவ மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் வானவேடிக்கை, கைலாய மேளத்துடன் திருவீதி உலா நடைபெற்றது. ஊத்தங்கரை ஐயப்ப சேவா சங்கம், தலைமை குருசாமி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் முனிரத்தினம், குருசாமிகள் கேசவன், சண்முகம், முத்துவேல், ராஜூ, வைத்திலிங்கம், குமரேசன், தங்கமுருகன், கார்த்திகேயன், அருள்முருகன், சபரிசிங், சுரேஷ் மற்றும் பக்தர்கள் ஏற்பாடுகளை செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
