×

நேற்று விடுமுறை தினத்தையொட்டி சாத்தனூர் அணையில் திரண்ட மக்கள்

 

தண்டராம்பட்டு, டிச.8: திருவண்ணாமலை மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள சாத்தனூர் அணையானது 119 அடி நீர்மட்டம் கொண்டது. இந்த அணையின் பாசனத்தை நம்பி திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் சுமார் 50 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி நடைபெறுகிறது.மேலும், 3 மாவட்டங்களிலும் 88 ஏரிகள் மற்றும் திருக்கோவிலூர் பழைய ஆயக்கட்டு பாசன பகுதியில் 5 ஆயிரம் ஏக்கர் விளை நிலம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு கூட்டுக்குடிநீர் திட்டங்கள் ஆகியவை சாத்தனூர் அணையை நம்பியே உள்ளன.

Tags : Sathanur dam ,Thandarampattu ,Thenpennai river ,Tiruvannamalai district ,Tiruvannamalai ,Kallakurichi ,Villupuram ,
× RELATED மேல் செங்கம் பகுதியில் உள்ள 10 ஆயிரம்...