×

பெரம்பலூரில் திமுக சார்பில் அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

 

பெரம்பலூர், டிச.7: பெரம்பலூரில் திமுக சார்பில் அம்பேத்கரின் நினைவு நாளை முன்னிட்டு திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 69வது நாள் தினத்தில் பெரம்பலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் அம்பேத்கர் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பாளர் ஜெகதீசன், பெரம்பலூர் எம்எல்ஏ பிரபாகரன், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணைச் செயலாளர் பா.துரைசாமி, மாநில வர்த்தக அணி துணை அமைப்பாளர் குன்னம் சி.ராஜேந்திரன், மாவட்ட பொறியாளர் அணி பரமேஷ் குமார், தொகுதி பார்வையாளர்கள் தங்க.சித்தார்த்தன், ஏ.கே.அருண், தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் முகுந்தன், அண்ணாதுரை, ராமச்சந்திரன், முருகேசன்,
மாவட்ட துணைச் செயலாளர்கள் தழுதாழை பாஸ்கர் குன்னம் தெற்கு ஒன்றிய செயலாளர் மருவத்தூர் ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Tags : DMK ,Ambedkar ,Perambalur ,Dr. ,Perambalur district ,
× RELATED வெள்ளனூர் கிராமத்தில் வயலில் சாராய ஊரல் போட்ட நபர் கைது