×

கிராம பகுதிகளில் வேலை வாய்ப்பு திட்டம்

 

கோவை, டிச.7: கோவை மாவட்டத்தில் ஆனைமலை, அன்னூர், காரமடை வட்டாரங்கள் மற்றும் அதை சார்ந்த சில கிராமங்கள் பின் தங்கி பகுதியாக இருக்கிறது. இங்கே தொழில், வேலை வாய்ப்பு, கல்வி, மருத்துவ வசதிகள் செய்ய ேவண்டும். வளர்ச்சி திட்டங்கள், பல்வேறு செயல் திட்டங்கள் மேற்கொள்ளப்படவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள் தங்களது சமூக பங்களிப்பு நிதி மூலமாக பல்வேறு பணிகளை இந்த வட்டாரத்தில் செய்ய வைக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.

இதுதவிர, தன்னார்வ அமைப்புகள் சிஎஸ்ஆர் நிதி மூலமாக இந்த வட்டாரங்களை மேம்படுத்த உதவி செய்ய கோரிக்கை விடப்பட்டுள்ளது. வேலை வாய்ப்பு மற்றும் பல்வேறு தொழில் சார்ந்த தேவைகளை பூர்த்தி செய்ய கிராம பகுதிகளை மேம்படுத்தி வளம் மிகுந்த வட்டாரமாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
அந்தந்த வட்டார கிராமங்களில் வசிப்பவர்கள் அதே வட்டாரத்தில் வேலை வாய்ப்பு, கல்வி, சமூக பொருளாதார அந்தஸ்து பெறும் வகையில் பணியாற்ற ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. வேலை வாய்ப்பு, வசிப்பிடம், போக்குவரத்து போன்றவற்றை அந்தந்த வட்டாரங்களில் வசிக்கும் மக்கள் முழுமையாக பெற்று விட்டார்களா? என உறுதி செய்ய கண்காணிப்பு குழு அமைக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

Tags : Coimbatore ,Coimbatore district ,Anaimalai ,Annur ,Karamadai ,
× RELATED சபரிமலை சீசன் காரணமாக கோவையில் நேந்திரன் பழம் கிலோவுக்கு ரூ.15 உயர்வு