பரந்தூர் புதிய விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல் மக்கள் போராட்டம்

காஞ்சிபுரம்: பரந்தூர் புதிய விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிள்ளைகளை பள்ளிக்கு  அனுப்பாமல் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 13 கிராமங்களை உள்ளடக்கி சுமார் 4291 ஏக்கர் பரப்பளவில் பரந்தூர் பசுமை வழி விமானநிலையம் அமைப்பதற்கான ஒன்றிய, மாநில அரசுகள் அறிவிப்புகள் வெளியிட்டது.

இந்நிலையில் கிராமப்புறங்களில் இருக்கும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை வழங்கக்கூடிய கிராம நிர்வாக அலுவலகம் பழுதாகி இருப்பதாகவும் தெரிவித்தனர். இந்நிலையில் பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து எந்த வித அறிவிப்பும் வெளியிடாத நிலையில் கிராமமக்கள் தொடர்ந்து 248வது நாள் தொடர்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கிராமத்தில் அரசு நடுநிலை பள்ளிசெயல்பட்டு வருகிறது, இதில் 1 வகுப்பு முதல் 8ம் வகுப்புவரை பிள்ளைகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளிக்கு வரக்கூடிய குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் ஏகனாபுரம் கிராமமக்கள் இன்று முதல் தொடர் பள்ளி புறக்கணிப்பு போராட்டத்தை நடத்திவருகின்றனர். மேலும் கருப்பு கொடிகளை ஏந்தியபடி கிராமப்புறங்களில் ஊர்வலமாக வந்து கிராம நிர்வாகம் அமைந்துள்ள பகுதியில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

Related Stories: