தமிழ்நாட்டில் கோவில்களின் செயல்பாடுகள் வெளிப்படையாக இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்: உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மதுரை: தமிழ்நாட்டில் பல புகழ்பெற்ற கோயில்களும் அதற்கு பல வரலாறுகளும் உள்ளன. தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பல புகழ்பெற்ற கோயில்கள் உள்ளது. தமிழ்நாட்டிலுள்ள கோயில்களின் பெயர்களில் இயங்கும் இணையதளங்கள் முறைப்படுத்த 12 வழிகாட்டு நெறிமுறைகளை உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவித்தது.

திருப்பதி, சபரிமலை போன்று தமிழ்நாட்டில் கோவில்களின் செயல்பாடுகள் வெளிப்படையாக இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். கோவில்கள் பெயரில் போலி இணையதளங்கள் தொடங்கி மோசடி செய்த இணையதளங்களை முடக்க கோரி வழக்கு தொடர்ந்தனர். போலி இணையதளங்கள் இயக்குவோர் மீது உரிமையியல் குற்றவியல் வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்க உத்தரவு அளித்துள்ளனர்.

போலி இணையதளங்கள் மூலம் வசூலிக்கப்பட்டதை கண்டறிந்து பறிமுதல் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளார். தகவல் தொழிநுட்பத்துறை மூலம் கோவில்களின் அங்கீகரிக்கப்பட்ட இணையதள முகவரிகளை தெரியப்படுத்தவேண்டும். அங்கீகரிக்கப்பட்ட இணையதளங்களில் மட்டும் பூஜைகள், நன்கொடைகள் வழங்குவது உள்ளிட்டவற்றை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். திருமணத்திற்கான கட்டணம் நன்கொடையை கோயில் நிர்வாகம் வசூலித்தல் ரசீது கண்டிப்பாக தர வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கோயில்களில் உண்டியல்களை வைத்து அவற்றிலேயே காணிக்களைக் செலுத்த அறிவுறுத்த வேண்டும். சேவைக்கான கட்டணம் குறித்து கோயில்களில் விளம்பரம் வைக்க வேண்டும். கோயில் அர்ச்சர்கள், வழிகாட்டிகள், அலுவலர்களுக்கு உரிய அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும். போலி இணையத்தளங்கள் குறித்து புகாரளிக்க தனி அலுவலரை நியமித்து தனி தொலைபேசி எண்ணை உருவாக்க வேண்டும் என்று ஐகோர்ட் கிளை உத்தரவு அளித்துள்ளது

Related Stories: