ஏற்காட்டில் கடும் பனி மூட்டம்-இயல்பு வாழ்க்கை பாதிப்பு

ஏற்காடு : ஏற்காட்டில் நிலவிய கடும் பனி மூட்டத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சேலம் மாவட்டம் ஏற்காட்டிற்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா மற்றும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். ஏற்காட்டில் இயற்கை அழகை கண்டு ரசிப்பதோடு எப்போதும் மிதமான சூழ்நிலை நிலவுவதால் விடுமுறை நாட்களில் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில், ஏற்காட்டில் நேற்று காலை மதலே கடும் பனிப்பொழிவு நிலவியது. பனியின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பொதுமக்கள்  வெளியே வர முடியாமல் வீட்டில் முடங்கினர்.

குறிப்பாக காலை 10 மணிக்கு மேலாகியும் பனிப்பொழிவு மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. இதனால், இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்ட படி சென்றன. எதிரே வரும் ஆட்கள் கூட தெரியாத சூழ்நிலை நேற்று நிலவியது. நாளுக்கு நாள் இதுபோன்ற பனிப்பொழிவு அதிகரித்து வருகிறது. எப்போதும் இல்லாத அளவில் தற்போது குளிர் அதிகமாக உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.பனிப்பொழிவால் சுற்றுலா பயணிகளும், சாலையோர வியாபாரிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். உள்ளூர்வாசிகள் சுற்றுலா பயணிகள் ஜெர்கின், ஸ்வெட்டர், குல்லா அணிந்தபடி நடமாடி வருகின்றனர்.

Related Stories: