கல்வராயன்மலையில் 3000 லி சாராய ஊறல் அழிப்பு

கல்வராயன்மலை : கள்ளக்குறிச்சி  மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தை ஒழிக்க எஸ்பி மோகன்ராஜ் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து  வருகிறார். இந்நிலையில் கள்ளக்குறிச்சி மதுவிலக்கு  அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் பரமேஸ்வரி, கரியாலூர் காவல் நிலைய  உதவி ஆய்வாளர் சேகர் ஆகியோர் தலைமையில் தனிப்படை காவலர்கள் ராமலிங்கம் மற்றும் காவலர்கள் ரமேஷ், மாரியப்பன், தனசேகர், ஜெயவேல்  ஆகியோர் கல்வராயன்மலை பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது வாரம்  கிராமத்தில் 15 பேரல்களில் மறைத்து வைத்திருந்த 3000 லிட்டர் சாராய ஊறல்களை கண்டுபிடித்து சம்பவ இடத்திலேயே கொட்டி  அழித்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமுதாயத்தை சீர்குலைக்கும்  கள்ளச்சாராயம், குட்கா போன்றவற்றை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்  என எஸ்பி எச்சரித்துள்ளார்.

Related Stories: