சேலம் ரயில்வே கோட்டத்தில் பல்வேறு இடங்களில் ரயில் பாதை பராமரிப்பு காரணமாக 5 முக்கிய ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: சேலம் ரயில்வே கோட்டத்தில் பல்வேறு இடங்களில் ரயில் பாதை பராமரிப்பு காரணமாக 5 முக்கிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

* காலை 9.05க்கு புறப்படும் கோவை - சேலம் ரயில் (06802) பிப்ரவரி 3, 4, 6,10,11,13,17,18, 20, 24, 25, 27ல் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

* பகல் 1.40க்கு புறப்படும் சேலம் - கோவை ரயில் (06803) பிப்ரவரி 3, 4, 6,10, 11, 13, 17, 18, 20, 24, 25, 27ல் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

* பிற்பகல் 3.55க்கு புறப்படும் கரூர் - திருச்சி ரயில் (06882) பிப்ரவரி 14, 21, 28ல் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

* மாலை 4.20க்கு புறப்படும் திருச்சி - கரூர் ரயில் (06123) பிப்ரவரி 14, 21, 28ல் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

* காலை 6 மணிக்கு புறப்படும் விருத்தாச்சலம் - சேலம் ரயில் (06121) பிப்ரவரி 21, 28ல் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

* காலை 10.10 மணிக்கு புறப்படும் சேலம் - விருத்தாச்சலம் ரயில் (06896) பிப்ரவரி 21, 28ல்  முழுமையாக ரத்து.

* மாலை 4.20க்கு புறப்படும் விருத்தாச்சலம் - சேலம் ரயில் (06123) பிப்ரவரி 21, 28ல் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

* காலை 6.30க்கு புறப்படும் பாலக்காடு - திருச்சி ரயில் (16844) பிப்ரவரி 14, 21, 28 தேதிகளில் கரூருடன் நிறுத்தப்படும்.

* பகல் 1 மணிக்கு புறப்படும் திருச்சி - பாலக்காடு ரயில் (16844) பிப்ரவரி 14, 21, 28ல் கரூரில் இருந்து பிற்பகல் 2.25க்கு புறப்படும்.

* மாலை 4.30க்கு புறப்படும் திருச்சி - ஈரோடு ரயில் (06809) பிப்ரவரி 14, 21, 28 தேதிகளில் கரூரில் இருந்து மாலை 6.15க்கு புறப்படும்.

Related Stories: