மின்னல் தாக்கி பெண் பலி

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே கச்சிபெருமானத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாரதிராஜா மனைவி பானுப்பிரியா(30). 2 மகள்கள் உள்ளனர். நேற்று பானுப்பிரியா விவசாய நிலத்தில் உள்ள நெல் வயலில் களை எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது இடி, மின்னலுடன் திடீரென மழை பெய்தது. இதில் மின்னல் தாக்கி பானுப்பிரியா உடல் கருகி உயிரிழந்தார். தகவலறிந்து விருத்தாசலம் போலீசார் வந்து விசாரணை நடத்தினர். 4 மாடுகள் பலி : கடலூர் மாவட்டம், வேப்பூர் அடுத்த பூலாம்பாடி கிராமத்தை சேர்ந்த அய்யாசாமி (50), மு.அய்யாசாமி(40) ஆகியோரின் 4 மாடுகள்  நேற்று மின்னல் தாக்கி பலியானது.

Related Stories: