நாகர்கோவிலில் அண்ணா பஸ் நிலைய சீரமைப்பு பணி தொடக்கம்: பயணிகள் இருக்கைகள் மாற்றி அமைப்பு

நாகர்கோவில்: நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் தற்போது  புதுப்பிப்பு பணிகள் நடந்து வருகின்றன. ஏற்கனவே பயணிகளுக்கான கழிவறை கட்டுமான பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் பிளாட்பார சீரமைப்பு பணிகள் தொடங்கி உள்ளன. இதற்காக தரை தளத்ைத இடிக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக பயணிகளின் இருக்கைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே அண்ணா பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்யும் போது,  விரைவு போக்குவரத்து கழகத்தை இடமாற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து குமரி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் ஸ்ரீராம், மாவட்ட கலெக்டர், மேயர், ஆணையருக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது :

அண்ணா பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்யும் போது, அதன் அருகில் உள்ள விரைவு போக்குவரத்து கழகத்தை இடமாற்றம் செய்ய வேண்டும். இந்த இடம் மாநகராட்சிக்கு சொந்தமானதாகும். விரிவாக்கம் செய்யப்படும் இடத்தின் மாடியில், மாடியமைத்து மீனாட்சிபுரம் செல்ல புதிய சாலை அமைக்க வேண்டும்.

இந்த புதிய சாலை மூலம் அனை்தது வாகனங்களும் கான்வென்ட், கோட்டார் காவல் நிலையம் சந்திப்பு வழியாக மீனாட்சிபுரம் செல்லாமல், நேரடியாக பஸ் நிலையத்தில் இருந்தே மீனாட்சிபுரம் செல்ல முடியும். இந்த மாடி கார் பார்க்கிங் பகுதியில் மட்டும் சுமார் 250 கார்கள், 2000 பைக்குகளும் நிறுத்தும் வகையில் நல்ல வசதி ஏற்படுத்தப்பட வேண்டும்.

எஸ்.பி. அலுவலகத்தின் பின்புறம் சுமார் 40 அடி அகலத்தில் கழிவு நீர் ஓடை உண்டு. மாநகராட்சி பழைய வரைபடத்தில் இந்த ஓடை உள்ளது. தற்போது இந்த ஓடை, ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த ஓடையை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்க வேண்டும். இந்த ஆக்கிரமிப்பை அகற்றினால் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்த எஸ்.பி. அலுவலகம் அருகில் உள்ள பள்ளி கூடம் வரை புதிய பாதை அமைக்க முடியும்.

மீனாட்சிபுரம் அண்ணா பஸ் நிலையத்தையும், விரைவும் போக்குவரத்து கழகத்தை இணைத்து பஸ் நிலையம் விரிவாக்கம் செய்யும் போது மிகப்பெரிய வணிக வளாகமும் அமைத்து, மாநகராட்சி வருமானத்தை பெருக்க முடியும். இவ்வாறு கூறி உள்ளார்.

Related Stories: