எடப்பாடி பழனிசாமி பேச்சு; அதிமுகவை மற்றவர்களால் உடைக்க முடியாது

தாராபுரம்: மக்களால் உருவாக்கப்பட்ட அதிமுகவை மற்றவர்களால் உடைக்க முடியாது என்று தாராபுரத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார். திண்டுக்கல் மாவட்டம் பழநி மலைக்கோயிலில் நேற்று தரிசனம் செய்த எடப்பாடி பழனிசாமி  அங்கு சிறப்பு பூஜையில் பங்கேற்றார். முன்னாள் அமைச்சர்  எஸ்.பி.வேலுமணி ஆகியோர் நேற்று காலை திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வந்தனர். அங்கு நடந்த நிகழ்ச்சியில், எடப்பாடி பழனிசாமி பேசுகையில்,``இந்த  கூட்டத்தில் உள்ள ஒவ்வொருவரும் இந்த கட்சியின் நிர்வாகிகள். அதிமுக என்பது மக்களால் உருவாக்கப்பட்ட கட்சி. மற்றவர்களால் இதை உடைக்கவும், அழிக்கவும் முடியாது’’என்றார்.

முன்னதாக காங்கயத்தில் அதிமுக புறநகர் மாவட்டம் சார்பில் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு பேசிய எடப்பாடி பழனிசாமி, பாஜ தலைமையின் தயவு தேவைப்படுவதால் பெட்ரோல், டீசல், காஸ் விலை ஏற்றம் பற்றி வாய் திறக்காதது தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. அவர் மேடைக்கு அருகே வந்தவுடன் பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு சென்டர் மீடியன் மீது நின்றிருந்த பெண்கள் கீழே விழுந்தனர். ெநரிசலில் 2 பெண்கள் மயங்கி விழுந்தனர்.

Related Stories: