ஸ்டிரெச்சரை வெளியே கொண்டு சென்றதால் சாவு; மூதாட்டியிடம் கம்மல் திருட முயன்ற ஊழியர் சஸ்பெண்ட்

வேலூர்: வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரசவ வார்டு காத்திருப்பு அறையில் கடந்த 6ம் தேதி 70 வயது மூதாட்டி ஒருவர் உடல் நலம் பாதித்த நிலையில் தங்கி இருந்தார். அவருக்கு சிகிச்சை அளிக்க வார்டுக்கு அழைத்துச்செல்லுமாறு ஒப்பந்த தூய்மை பணியாளரிடம் மருத்துவ ஊழியர்கள்

தெரிவித்துள்ளனர். இதையடுத்து தூய்மை பணியாளர் மோகன், மூதாட்டியை ஸ்டிரெச்சரில் வைத்து வார்டுக்கு அழைத்து செல்லாமல் வெளியே ரோட்டுக்கு அழைத்து சென்றுள்ளார்.

அப்போது மூதாட்டி அணிந்திருந்த கம்மலையும் திருட முயன்றதாக தெரிகிறது. இதைபார்த்த ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள், அவரை தட்டிக்கேட்டனர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனை ஊழியர்கள், மூதாட்டியை மீட்டு வார்டில் சேர்த்தனர். அங்கு சிறிது நேரத்தில் மூதாட்டி  இறந்தார். இதைத்தொடர்ந்து ஒப்பந்த தூய்மை பணியாளரான மோகனை சஸ்பெண்ட் செய்து மருத்துவமனை நிர்வாகம் நேற்று முன்தினம் இரவு அதிரடி உத்தரவிட்டது. மேலும் வேலூர் தாலுகா போலீசார், மோகன் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Related Stories: