ரேஷன் அரிசி கடத்தியவரை பிடிக்காததால் சேலம் போலீஸ்காரருக்கு ‘பளார்’விட்ட எஸ்.பி.

சேலம்: சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில், கோவை மண்டல உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்பி பாலாஜி நேற்று முன்தினம் ஆய்வு செய்தார். பின்னர் அங்கிருந்து காரில் கோவைக்கு புறப்பட்டுச் சென்றார். சேலம் காகாபாளையம் பகுதியில் சென்ற போது, டூவீலரில் 2 மூட்டை ரேஷன் அரிசியுடன் ஒருவர் சென்றதை கவனித்த, எஸ்பி டூவீலரை துரத்தினார். அப்போது, கொண்டலாம்பட்டி ரோந்து வாகன எஸ்எஸ்ஐ அந்தோணி, டிரைவர் சிவக்குமார்  ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அவர்களிடம் எஸ்பி அரிசி கடத்தியவரை பிடிக்கும்படி கூறினார். அவர்கள் துரத்திச் சென்றால் தங்களை தாக்குவார்கள் என தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த எஸ்பி பாலாஜி, டிரைவர் சிவக்குமார் கன்னத்தில் பளார் என அறைந்து விட்டார். இதனிடையே டூவீலரில் சென்றவர்  தலைமறைவாகிவிட்டார். இதுபற்றி போலீஸ்காரர் சிவக்குமாரிடம் மாநகர தெற்கு துணை கமிஷனர் லாவண்யா விசாரித்தபோது அவர், எந்த விதமான நடவடிக்கையும்  எடுக்க வேண்டாம் என எழுதி கொடுத்துவிட்டு சென்றுவிட்டார்.

Related Stories: