செய்யூர் அருகே விளம்பூர் பகுதியில் முத்தாலம்மன், பொன்னியம்மன் கோயில்களில் ஆடி திருவிழா கோலாகலம்

செய்யூர்: விளம்பூர் கிராமத்தில் உள்ள முத்தாலம்மன் மற்றும் பொன்னியம்மன்  கோயில்களில் ஆடி உற்சவ திருவிழா கோலாகலமாக நடந்தது. செய்யூர் வட்டம், இடைக்கழிநாடு  பேரூராட்சி விளம்பூர் பகுதியில் முத்தாலம்மன் மற்றும் பொன்னியம்மன் கோயில்கள் உள்ளன. இங்கு, ஆண்டுதோறும் ஆடி உற்சவம் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்நிலையில்,  75ம் ஆண்டு ஆடி உற்சவ விழா நேற்று முன்தினம் நடந்தது. கடந்த 31ம் தேதி காப்பு கட்டுதலுடன் விழா துவங்கப்பட்டு தினமும் அம்மன்களுக்கு விசேஷ பூஜைகள் மற்றும் ஆராதனைகள் நடத்தப்பட்டன.

இதில், முக்கிய நிகழ்ச்சியான கூழ் வார்த்தல் நிகழ்ச்சி, அன்று மதியம் 2 மணியளவில் முத்தாலம்மன், பொன்னியம்மன் கோயில் வளாகத்தில் நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் ஏராளமானோர் காவடி எடுத்தல், பழம் குத்துதல், அலகு குத்துதல்,  வண்டி இழுத்தல் என பல்வேறு விதங்களில் தங்களது நேர்த்திக் கடன்களை செலுத்தினர். அன்றிரவு, மலர்கள் மற்றும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட காளியம்மன் வீதியுலாவும் நடந்தது. விழாவில் இடைக்கழிநாடு பேரூராட்சி பகுதி மக்கள் மற்றும் சுற்றுள்ள கிராமப்புறங்களிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன்களை வணங்கி சென்றனர். விழா ஏற்பாட்டினை கோயில் நிர்வாக குழுவினர் மற்றும் கிராம மக்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

Related Stories: