நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: மாநிலங்களவையை தொடர்ந்து மக்களவையும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

டெல்லி; நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருகின்றன. முன்கூட்டியே முடிந்தது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர். நாடாளுமன்றம் வரும் 12-ம் தேதி வரை நடைபெறுவதாக இருந்தது. இதனால் அதற்கு முன்னதாகவே  தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் தொடர்ந்து மக்களவை, மாநிலங்களவையாக இருந்தாலும் சரி எதிர்க்கட்சி எம்.பிக்களும்,  ஆளும்கட்சி எம்.பிக்களுக்கும் இடையே அமளியில் ஈடுபட்டதன் காரணமாக  இந்த ஒத்திவைப்பு என கூறப்படுகிறது.

இதுமட்டுமல்லாமல் இந்த வாரம் நாளை மற்றும் வியாழக்கிழமையும் அரசு விடுமுறையாக இருக்கிறது. எனவே இதனை கருத்தில் கொண்டு தான் மக்களவை மற்றும் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் கடந்த 18-ம் தேதி துவங்கி நடைபெற்றது. ஆகஸ்ட் 12-ம் தேதி வரை நடைபெறுவதாக ஒன்றிய அரசு முடிவெடுத்திருந்தது. நாடாளுமன்ற மழைக்காலம் கூட்டத்தொடர் தொடங்கிய பொழுது முதல் நாளில் இருந்து மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் பல்வேறு விதமான மக்கள் நலப் பிரச்சனைகளை எழுப்பினார்கள்.

குறிப்பாக விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்டவைகளின் விலை உயர்வு மற்றும்  மக்களுடைய அத்தியாவசிய பொருட்களான பால்,தயிர், போன்ற பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரிவிதிப்பு போன்ற பல்வேறு பிரச்சினைகளை எதிர்க்கட்சிகள் எழுப்பியுள்ளனர். ஒன்றிய அரசை பொறுத்த வரையில் 24-க்கும் மேற்பட்ட மசோதாக்களை நாடாளுமன்றம் இரு அவைகளிலும் தாக்கல் செய்து நிறைவேற்ற திட்டமிட்டிருந்தது. ஆனால் திட்டமிட்டபடி நாடாளுமன்றம் சரியாக இயங்கவில்லை எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பியது.

அதை முடக்கும் வகையில் ஆளும்கட்சி எம்.பிக்கள் தொடர்ந்து அவர்களுக்கு எதிராக குரல்களை எழுப்பினர். இதன் காரணமாக நாடாளுமன்றத்தில் பல நாட்கள் வெளிநடப்புகள், கூச்சல் குழப்பங்கள், அமளி என நாடாளுமன்றத்தில் இரு அவைகளும் சரியாக செயல்படாத  சூழ்நிலையில் தான் இறுதி நாளாக இன்று மக்களவையில் மின்சார சட்ட திருத்தம் மசோதா என்று தாக்கல் செய்யப்பட்டது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி மக்களவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த காரணத்தினால் மக்களவை நிலவைக்குழுவிற்கு மசோதா ஆய்விற்காக தாக்கப்பட்டிருக்கிறது.

இந்த சூழ்நிலையில் தான் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மறு தேதி கூறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. நாடாளுமன்றத்தில் இரு அவைகளுக்கும் இடையே அவைகள் ஒழுங்காக நடைபெறுவதை காட்டி இந்த காரணங்களுக்காக நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் முன்கூட்டியே முடிப்பதற்கும் ஒன்றிய அரசு முடிவு செய்து இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.

Related Stories: