பைக் மீது லாரி மோதி 4 பேர் பலி

அறந்தாங்கி: ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியைச் சேர்ந்தவர் சித்திக்(30). இவரது தனது நண்பருடன் புதுக்கோட்டை மாவட்டம் மீமிசலுக்கு வந்துவிட்டு கிழக்கு கடற்கரை சாலை வழியாக ஊருக்கு நேற்று மாலை திரும்பிக் கொண்டிருந்தார். அதேபோல மீமிசல் அருகே தனியார் இறால் பண்ணையில் பணியாற்றி வந்த பகவான்(32), ஆரோக்கியசெல்வம்(30) வெளிவயல் பாலத்தில் சென்றுகொண்டிருந்தபோது, தேவகோட்டையில் இருந்து வந்த மணல் லாரி சித்திக் ஓட்டிவந்த பைக் மீது மோதி விட்டு, பகவான், ஆரோக்கிய செல்வம் மீதும் மோதியதில்,  3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். சித்திக் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார்  லாரி ஓட்டுனர் சரத்குமாரை (40) கைது செய்தனர்.

Related Stories: