சின்னமனூரில் நெல் நடவு பணிகள் தீவிரம்

சின்னமனூர்: சின்னமனூர் பகுதியில் நான்காயிரம் ஏக்கர் விவசாயம் நிலம் உள்ளது. இப்பகுதியில் முதல்போக நெல் சாகுபடி பணிக்காக கடந்த ஜூன் முதல் தேதியில் முல்லைப்பெரியாறில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. தண்ணீர் திறக்கப்பட்டதையொட்டி அப்பகுதி விவசாயிகள் வயல்களில் நாற்றாங்கல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர்.

தற்போது நெல் நாற்றுகள் நன்றாக வளர்ந்து விட்டதால், அதனை பிடுங்கி தயார்படுத்தி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். வயல்வெளிகளில் இயற்கை உரங்கள் மற்றும் சாணத்தை மண்ணில் கலந்து புரட்டிப் போட்டு தயார் செய்யப்பட்ட நிலத்தில் நாற்றுகளை நடவு பணிகளில் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

சின்னமனூர் பகுதிகள் கடந்த ஆண்டு இரண்டாம் போகம் சாகுபடியினை நிறைவு செய்த பின்பு, இரண்டு மாதங்கள் வறண்டு நிலையில் கிடந்த அனைத்து வயல் வெளிகளிலும், தற்போது முதல்போக நெல் நடவு பணிகளால் மீண்டும் புத்துயிர் பெற்று பசுமையாக மாறி வருகிறது என்பது குறிப்பிடதக்கது.

Related Stories: