சேலம்-கரூர் ரயில் நேரம் மாற்றம்

சேலம்: சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட சேலம்-கரூர் இடையே முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரயில் (06836, 06837) இரு மார்க்கத்திலும் வாரத்திற்கு 6 நாட்கள் (ஞாயிறு தவிர) இயக்கப்பட்டு வருகிறது. கரூர்-சேலம் ரயில் காலை 8.50 மணிக்கு புறப்பட்டு, சேலத்திற்கு காலை 10.30 மணிக்கு வந்து சேர்ந்தது.

மறுமார்க்கத்தில் சேலம்-கரூர் ரயில் மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு கரூருக்கு இரவு 7.10 மணிக்கு சென்றடைந்தது. இந்த ரயில் இயக்க நேரத்தில் மாற்றத்தை ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. இதன்படி, கரூர்-சேலம் முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் (06836), கரூரில் காலை 7.30 மணிக்கு புறப்பட்டு, மோகனூருக்கு காலை 7.46-க்கும், நாமக்கல்லுக்கு காலை 8.04-க்கும், களங்காணிக்கு காலை 8.17-க்கும், ராசிபுரத்திற்கு காலை 8.29-க்கும், மல்லூருக்கு காலை 8.43-க்கும் வந்து சேலத்திற்கு காலை 9.30 மணிக்கு வந்து சேர்கிறது.

மறுமார்க்கத்தில் சேலம்-கரூர் முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் (06837) சேலத்தில் மாலை 6 மணிக்கு புறப்பட்டு, மல்லூருக்கு மாலை 6.14-க்கும், ராசிபுரத்திற்கு மாலை 6.24-க்கும், களங்காணிக்கு மாலை 6.44-க்கும், நாமக்கல்லுக்கு மாலை 6.55-க்கும், மோகனூருக்கு இரவு 7.13-க்கும் சென்று, கரூரை இரவு 7.45 மணிக்கு சென்றடைகிறது. இந்த புதிய நேரத்தில் ரயில் இயக்கம் நேற்று முதல் அமலுக்கு வந்தது.

Related Stories: