ஜூலை 11ம் தேதி திட்டமிட்டபடி நீட் நுழைவுத் தேர்வு நடைபெறும்: தேசிய தேர்வு முகமை திட்டவட்டம்..!

டெல்லி: நீட் நுழைவுத் தேர்வு ஏற்கனவே அறிவிக்கப்பட்டப்படி ஜூலை 17ம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகாமை திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நீட் தேர்வு மூலம் நடைபெற்று வருகிறது. நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. 2022-2023ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு ஜூலை 17ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. நீட் நுழைவுத் தேர்வை ஒத்திவைக்குமாறு பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.

ஒரே தேதியில் பல்வேறு தேர்வுகள் நடப்பதாக சமூக தளங்களில் மாணவர்கள் பதிவிட்டிருந்தனர். நீட் தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என நாடெங்குமிருந்து கோரிக்கைகள் வந்த நிலையில் தேசிய தேர்வு முகாமை விளக்கம் அளித்துள்ளது. திட்டமிட்டப்படி ஜூலை 15ம் தேதி கியூட் தேர்வும், ஜூலை 21ம் தேதி ஜி மெயின் தேர்வும் நடைபெறும் என தேசிய தேர்வு முகமை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

Related Stories: