ஈபிஎஸ் பக்கம் சாய்ந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள்: எடப்பாடி பழனிசாமியின் ஆதரவு பொதுக்குழு உறுப்பினர்கள் எண்ணிக்கை 2440ஆக அதிகரிப்பு

சென்னை: ஓபிஎஸ் ஆதரவாளர்களான 9 பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமி உடன் சந்தித்து பேசி வருகின்றனர். அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக ஓபிஎஸ், இபிஎஸ் இடையே மோதல் போக்கு தொடர்ந்து நீடித்து வருகிறது. ஒற்றைத் தலைமை என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்ற வகையில் நீதிமன்றம் வரை சென்று அதனை முறியடித்தார். இதனால், எடப்பாடி தரப்பு கடும் அதிர்ச்சியடைந்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படாததால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலியாகி விட்டது என்றும் அறிவித்தனர். அதே நேரத்தில் வருகிற 11ம் தேதி அதிமுக பொதுக்குழு மீண்டும் கூட்டப்படும்.

அதில் ஒற்றைத் தலைமை குறித்து முடிவு செய்யப்படும் என்று எடப்பாடி தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படி கூடும் பட்சத்தில் அது சட்டப்படி செல்லாது என்றும் ஓபிஎஸ் தரப்பில் கூறி வருகின்றனர். இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் 9 பேர் ஈபிஎஸ் இல்லத்திற்கு வந்துள்ளது. பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ஓபிஎஸ் ஆதராவாளராக உள்ள நிலையில், பொதுக்குழு உறுப்பினர்கள் ஈபிஎஸ்-க்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். எடப்பாடி பழனிசாமியின் ஆதரவு பொதுக்குழு உறுப்பினர்கள் எண்ணிக்கை 2440ஆக அதிகரித்துள்ளது. ஓபிஎஸ் ஆதரவாளர்களின் எண்ணிக்கை சரிந்து வருகிறது.

Related Stories: