சில நாட்களாக ஏற்ற தாழ்வுடன் காணப்படும் தங்கத்தின் விலை...ஒரு சவரன் ரூ.80 குறைந்து, சவரன் ரூ.38,120-க்கு விற்பனை

சென்னை: தங்கம் விலை நேற்று சவரனுக்கு 160 அதிகரித்தது.தங்கம் விலை கடந்த சில மாதங்களாக ஏற்றம் இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. கடந்த 25-ம் தேதி தங்கம் விலை ஒரு கிராம் ரூ.4,755-க்கும், ஒரு சவரன் 38,040-க்கு விற்கப்பட்டது. 26-ம் தேதி தங்கம் விலை ஒரு கிராம் ரூ. 4,755-க்கும், ஒரு சவரன் 38,040-க்கு விற்கப்பட்டது.  அதனையடுத்து நேற்று 27-ம் தேதி தங்கம் விலை சற்று உயர்ந்தது. இதாவது ஒரு கிராம் ரூ. 4,775 க்கும், ஒரு சவரன் ரூ. 38,200-க்கும் விற்பனையானது.

தொடர்ந்து சில நாட்களாக ஒரே மாதிரி சிறிது ஏற்ற தாழ்வுடன் தங்கம் விலை இருந்து வருகிறது. இது நகை வாங்குவோருக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இன்று தங்கம் விலையில் பெரிய மாற்றம் காணப்படவில்லை. அதாவது, கிராமுக்கு 10 குறைந்து,  ஒரு கிராம் ரூ. 4,765 க்கும், சவரனுக்கு 80 குறைந்து, ஒரு சவரன் ரூ.38,120 க்கும் விற்கப்பட்டது.

Related Stories: