விளாத்திகுளம் அருகே நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த லோடு ஆட்டோ

விளாத்திகுளம்: விளாத்திகுளம் அருகே சாலையில் வந்து கொண்டிருந்த லோடு ஆட்டோ திடீரென தீப்பிடித்து எரிந்தது.விளாத்திகுளம் அருகே இலந்தைகுளத்தைச் சேர்ந்த உமையனன் மகன் மாரிச்செல்வம் (21). இவர் சொந்தமாக லோடு ஆட்டோ வைத்து தொழில் செய்து வருகிறார். நேற்று காலை மாரிச்செல்வம் தனது ஆட்டோவில் கோவில்பட்டிக்கு சென்ற நிலையில்   மாலையில் மீண்டும் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார்.

விளாத்திகுளம் அருகே வந்தபோது லோடு ஆட்டோவில் இருந்து புகை வந்தது.  இதனால் சுதாரித்த அவர் உடனடியாக வாகனத்தை நிறுத்திவிட்டு வெளியேறினார். சிறிதுநேரத்தில் லோடு ஆட்டோ தீப்பிடித்து எரிந்தது. காற்று பலமாக வீசியதால் ஆட்டோ முழுவதும் தீ மளமளவென பரவியது. தகவலறிந்து விளாத்திகுளம் தீயணைப்பு நிலைய அலுவலர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். ஆனாலும் லோடு ஆட்டோ முழுவதுமாக எரிந்து சேதமடைந்தது. இதுகுறித்து விளாத்திகுளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: