கள்ளக்குறிச்சியில் கிணற்றுக்குள் விழுந்த பூனை குட்டியை 30 நிமிடம் போராடி வெளியே எடுத்த தீயணைப்பு துறை: குவியும் பாராட்டு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கேசவலு நகர் பகுதியில் வசித்து வரும் சாதிக் என்பவர் கடந்த ஆறு மாதங்களாக செல்லப்பிராணியான பூனை குட்டி ஒன்றை வளர்த்து வருகிறார். தற்போது அவர் வீட்டில் பராமரிப்பு பணி நடைபெற்று வருவதால் அவர்கள் வீட்டுக்குள்ளே உள்ள  கிணற்றில்  அந்தப் பூனை குட்டி தவறி கீழே விழுந்துள்ளது. பூனை குட்டியை வெகுநேரமாக காணவில்லை என்பதை அறிந்த சாதிக் சத்தம் கேட்டு கிணற்றுக்கு அருகில் சென்று பார்த்தபோது கிணற்றுக்குள் பூனைக்குட்டி நீந்திக் கொண்டிருப்பதை பார்த்த  அதிர்ந்தார். உடனடியாக அவர் அந்தப் பூனை குட்டி எடுப்பதற்கு பல வழிகளில் முயற்சி செய்தபோதிலும் கடைசிவரை பலன்  இல்லாத காரணத்தால் தீயணைப்பு துறை அதிகாரிகளை வரவழைத்தார்.

தகவலறிந்த தீயணைப்புத் துறை வீரர்கள் விரைந்து வந்து அந்த பூனை குட்டியை காப்பாற்றுவதற்காக 30 நிமிடம் போராடி பூனைக்குட்டியை கிணற்றிலிருந்து வெளியே எடுத்தனர். அந்தப் பூனை குட்டியை பரிசோதித்த தீயணைப்புத்துறையினர் சிறிதும் அசைவில்லாத அந்த பூனை குட்டிக்கு முதலுதவி செய்து வெகுநேரம் அதை காப்பாற்ற முயற்சித்தும் பலனில்லாமல் அந்த பூனை குட்டி இறந்து போனது. இச்சம்பவம் அப்பகுதியில் உள்ள அனைவரையும்  துயரத்தில் ஆழ்த்தியது .  மேலும் ஒரு பூனையின் உயிரைக் காப்பாற்றுவதற்கு வெகுநேரம் போராடிய தீயணைப்புத் துறையினரை பொதுமக்கள் அனைவரும் பாராட்டி வண்ணம் உள்ளனர்.

Related Stories: