அதிகபாரம் ஏற்றி வந்த 3 டாரஸ் லாரிகள் பறிமுதல்

நாகர்கோவில்: குமரி மாவட்டம் வழியாக  கனிமங்கள் கடத்தப்படுவதை தடுக்கும் வகையில் காவல்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். மேலும் அளவுக்கு அதிகமாக கனிமங்கள் கொண்டு செல்லும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று முன் தினம் இரவு ஒழுகினசேரி பகுதியில் கோட்டார் போலீசார் வாகன சோதனையில் இருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த டாரஸ் லாரிகளை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் அந்த லாரிகளில் அளவுக்கு அதிகமாக எம்சேண்ட் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து  அந்த 3 டாரஸ் லாரிகளையும் பறிமுதல் செய்தனர். அந்த லாரிகள், தற்போது கோட்டார் காவல் நிலையம் முன் நிறுத்தப்பட்டுள்ளது. அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றி வந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என போலீசார் கூறினர்.

Related Stories: