பராமரிப்பு பணிகளுக்காக கோவை, பெங்களூருவில் இருந்து சென்னை செல்லும் 3 ரயில்கள் காட்பாடியில் நிறுத்தம்: பயணிகள் கடும் அவதி

அரக்கோணம்: அரக்கோணம் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடப்பதால், கோவை, பெங்களூருவில் இருந்து சென்னை செல்லும் 3 எக்ஸ்பிரஸ் ரயில்கள் நேற்று காட்பாடியிலேயே நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதிaக்குள்ளாகினர். ராணிப்பேட்டை மாவட்டம், அரக்ேகாணம் ரயில் நிலைய யார்டில் நேற்றும், இன்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என ரயில்வே நிர்வாகம் ஏற்கனவே தெரிவித்து இருந்தது. அதன்படி, அரக்கோணம் ரயில் நிலைய யார்டு பகுதியில் நேற்று காலை 9.45 மணிக்கு பராமரிப்பு பணிகள் தொடங்கியது. பிற்பகல் 1.45 மணி வரை நடந்தது.

இப்பணிகளில் 100க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர். இதற்காக கனரக தொழில்நுட்ப இயந்திரங்கள் வரவழைத்து பணிகள் நடந்தது. இதேபோல், 2வது நாளாக இன்றும் இப்பணிகள் நடக்க உள்ளது. இதனால் பெங்களூருவில் இருந்து சென்னை செல்லும் லால்பாக் எக்ஸ்பிரஸ், கோவையில் இருந்து சென்னை செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், பெங்களூருவில் இருந்து சென்னை செல்லும் பெங்களூரு எக்ஸ்பிரஸ் ஆகிய 3 ரயில்களும் காட்பாடியிலேயே நிறுத்தப்பட்டது. இதையடுத்து, அந்த 3 ரயில்களும் காட்பாடியில் இருந்து கோவை, பெங்களூருக்கு இயக்கப்படுகிறது. அதேபோல், சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் சப்தகிரி எக்ஸ்பிரஸ் நேற்றும், இன்றும் 2 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டது. இதுதவிர, சென்னை- அரக்ேகாணம் செல்லும் 4 மின்சார ரயில்களும் கடம்பத்தூர் வரை இயக்கப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

Related Stories: