கோவில்பட்டியில் தொடங்கிய 12வது தேசிய ஜூனியர் ஹாக்கி போட்டியில் சத்திஸ்கர் அணியை விழுத்தி தமிழ்நாடு அணி வெற்றி: திமுக எம்.பி. கனிமொழி பங்கேற்பு

கோவில்பட்டி: கோவில்பட்டியில் தொடங்கிய 12வது தேசிய ஜூனியர் ஹாக்கி போட்டியில் சத்திஸ்கர் அணியை விழுத்தி தமிழ்நாடு அணி வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முன்னிலை பெற்று உள்ளது. கோவில்பட்டி கிருஷ்ணாநகரில் உள்ள செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானத்தில் இத்தொடர் நடைபெற்று வருகிறது. நாடு முழுவதிலும் இருந்து பல அணிகள் பங்கேற்று வருகின்றன. நேற்று நடைபெற்ற ஜி பிரிவிற்கான லீக் சுற்றில் தமிழ்நாடு அணியை எதிர்த்து சத்திஸ்கர் மாநில அணி களமிறங்கியது.

விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் 3-1 என்ற கோல் கணக்கில் தமிழக அணி வாகை சூடியது. தமிழக அணியின் கேப்டன் சதிஷ் ஆட்டநாயகன் விருதை பெற்றார். மற்றொரு போட்டியில் அரியானா- கேரளா இடையிலான போட்டியில் 8-1 என்ற கோல் கணக்கில் அரியானா அணி அபார வெற்றி பெற்றது. முன்னதாக காலையில் நடைபெற்ற தொடக்க விழாவில் அமைச்சர் கீதா ஜீவன், திமுக எம்.பி. கனிமொழி ஆகியோர் கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்து வீரர்களை வாழ்த்தினர்.

Related Stories: