×

டப்பிங் யூனியனில் ஊழல் புகார் ராதாரவி மீது வழக்கு தொடர தொழிலாளர் நலத்துறை அனுமதி

சென்னை: தென்னிந்திய திரைப்பட மற்றும் சின்னத்திரை டப்பிங் கலைஞர்கள் சங்கத்திற்கு பல ஆண்டுகளாக நடிகர் ராதாரவி தலைவராக இருக்கிறார். சங்கத்தில் அவர் பல கோடி ஊழல் செய்திருப்பதாக தொடரப்பட்ட வழக்கில், இது குறித்து விசாரணை நடத்துமாறு தொழிலாளர் நலத்துறைக்கு கோர்ட் உத்தரவிட்டது. இது குறித்து விசாரணை நடத்திய தொழிலாளர் நலத்துறை குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பதால் வழக்கு தொடரலாம் என அனுமதி வழங்கி உள்ளது. இது தொடர்பாக வழக்கு தொடர்ந்த சங்க உறுப்பினர்களான மயிலை குமார், சிஜி, மற்றும் தாசரதி ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:

நடிகர் ராதாரவி டப்பிங் யூனியனில் தலைவராக பல ஆண்டுகள் இருந்துள்ளார். இப்போதும் அவர்தான் தலைவராக இருக்கிறார். அவர் பதவி காலத்தில் உறுப்பினர்களின் சம்பளத்தில் 10 சதவிகிதத்தை சங்க வளர்ச்சிக்காக என்று வசூலித்து வந்தார். அதை வசூலிக்க ஆட்களை நியமித்து அவர்களுக்கு 5 சதவிகிதம் கமிஷனும் கொடுத்து வந்தார். இதன் மூலம் கிடைத்த பல கோடி ரூபாயை அவர் மோசடி செய்துள்ளார்.

சங்கத்திற்கு ஒரு கோடியே 25 லட்சத்துக்கு கட்டிடம் வாங்கியதாக கணக்கு காட்டி உள்ளார். ஆனால் அந்த கட்டிடத்தின் மதிப்பு 47 லட்சம் ரூபாய்தான் என்பது பத்திர பதிவு மூலம் தெரியவந்தது. இதற்கான அனுமதியையும் அவர் சங்க உறுப்பினர்களிடம் பெறவில்லை. எதிர்த்து கேட்டவர்கள் அனைவரையும் சங்கத்தில் இருந்து நீக்கினார். இதனால் யூனியனின் மூத்த கலைஞர்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

Tags : Labour Welfare Department ,Ratavi , Dubbing Union, Corruption Complaint, Case Against Radhakrishnan, Labor Welfare Permit
× RELATED தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 அன்று...