இந்திய நிதியமைச்சகத்தின் புதிய தலைமைப் பொருளாதார ஆலோசகராக ஆனந்த நாகேஸ்வரன் நியமனம் .!

டெல்லி: இந்திய நிதியமைச்சகத்தின் புதிய தலைமைப் பொருளாதார ஆலோசகராக ஆனந்த நாகேஸ்வரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மத்திய அரசு விரைவில் புதிய மத்திய நிதியமைச்சகத்தின் தலைமை பொருளாதார ஆலோசகரை நியமிக்க உள்ளதாகவும்,  தலைமை பொருளாதார ஆலோசகர் பதவியில் வி.ஆனந்த நாகேஸ்வரன் நியமிக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில், மத்திய நிதியமைச்சகத்தின் தலைமை பொருளாதார ஆலோசகராக (CEA) டாக்டர் ஆனந்த நாகேஸ்வரன் நியமனம் செய்து மத்திய அரசு அறிவித்துள்ளது.

மாசசூசெஸ்ட்ஸ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர் ஆனந்த நாகேஸ்வரன். 2019-2021 ஆண்டுக்கான பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழுவின் பகுதி நேர உறுப்பினராகவும் இவர் பணியாற்றியுள்ளார். 1994 மற்றும் 2011 க்கு இடையில் சுவிட்சர்லாந்து மற்றும் சிங்கப்பூரில் உள்ள பல தனியார் செல்வ மேலாண்மை நிறுவனங்களுக்கு மேக்ரோ-பொருளாதார மற்றும் மூலதன சந்தை ஆராய்ச்சியில் பல தலைமைப் பாத்திரங்களை அவர் வகித்துள்ளார். பிப்.1-ல் மத்திய பொது பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ள நிலையில், புதிய தலைமை பொருளாதார ஆலோசகர் நியமிக்கப்பட்டுள்ளது.

Related Stories: