கொரோனா பரவல் காரணமாக சென்னை புறநகர் ரயில்களில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நீக்கம்; தெற்கு ரயில்வே அறிவிப்பு.!

சென்னை: சென்னை புறநகர் ரயில்களில் பயணச்சீட்டு வாங்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் பிப்ரவரி 1 முதல் நீக்கப்படுகிறது என ரயில்வே நிர்வாகம் தெரிவித்தது. தமிழ்நாடு அரசு விதித்த கட்டுப்பாடுகள் திரும்ப பெறப்பட்ட நிலையில் ரயில்வே விதித்த கட்டுப்பாடுகளும் நீக்கப்படுகிறது என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியிருந்தால் தான் பயணச்சீட்டு என்ற கட்டுப்பாட்டை ரயில்வே நிர்வாகம் நீக்கியது. கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வந்த காரணத்தால் சென்னை புறநகர் ரெயில்களில் பயணம் செய்யும் பயணிகள் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை வைத்திருக்க வேண்டும்.

அதை காண்பித்தால்தான் சீசன் டிக்கெட், ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கு டிக்கெட் வழங்கப்படும் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது கட்டப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கை நீக்கிய நிலையில் தெற்கு ரெயில்வேயிடம் இருந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த நடைமுறை பிப்ரவரி 1-ல் இருந்து நடைமுறைக்கு வருகிறது.

Related Stories: