பாகசாலை கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம்; தரைப்பாலம் மூழ்கியது

திருத்தணி: திருத்தணி அருகே பாகசாலை கொசஸ்தலை ஆற்றில் உள்ள தரைப்பாலம் மூழ்கிவிட்டதால் 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் வட்டம் கேசவபுரம் அணையில் இருந்து திறந்துவிடப்பட்டுள்ள தண்ணீர் திருவாலங்காடு ஒன்றியம் ஒரத்தூர், பாகசாலை, எல்வி.புரம் வழியாக கொசஸ்தலை ஆற்றிலும் கடம்பத்தூர் ஒன்றியம் பேரம்பாக்கம், பிஞ்சிவாக்கம் வழியாக செல்லும் கூவம் ஆற்றிலும் கலந்தது. இந்த நிலையில், கடந்த ஒருவாரமாக பாகசாலை வழியாக கொசஸ்தலை ஆற்றுக்கு மட்டும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் குப்பம்கண்டிகையில் உள்ள தரைப்பாலம், எல்வி.புரம் ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள தரைப்பாலம் ஆகியவை முற்றிலும் அடித்துசெல்லப்பட்டுவிட்டது.இதன்காரணமாக சுமார் 15க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சுமார் 15 கி.மீ தூரம் சுற்றி மணவூர், திருவாலங்காடு, திருவள்ளூர் ஆகிய பகுதிகளுக்கு பாகசாலையில் உள்ள தரைப்பாலத்தை கடந்துதான் சென்றுவந்தனர்.

தற்போது பாகசாலை தரைப்பாலத்தை மழைவெள்ளம் முற்றிலுமாக மூழ்கடித்துவிட்டதாலும் கேசவபுரம் அணையில் இருந்து கொசஸ்தலை ஆற்றில் மொத்தமாக தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதாலும் பாகசாலை தரைப்பாலத்தை வெள்ளநீர் மூழ்கடித்து செல்கிறது. இதனால் 20க்கு மேற்பட்ட கிராம மக்கள் பாதிக்கப்படும் அச்சம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் அந்த கிராமங்களுக்கு போக்குவரத்து முற்றிலும் முடங்கி விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆபத்து நிகழும் முன் கூவம், கொசஸ்தலை ஆற்றில் பாதுகாப்புடன் தண்ணீர் திறந்துவிட வேண்டும்’ என்று மக்கள் கூறுகின்றனர்.

Related Stories: