பாபநாசம் வனப்பகுதி சாலையில் சுற்றித் திரியும் காட்டெருமைகள்

வி.கே.புரம்: முண்டந்துறை புலிகள் காப்பக பகுதிகளில் புலி, சிறுத்தை, யானை, காட்டெருமை, மான், மிளா உள்ளிட்ட விலங்குகள் காணப்படுகின்றன. இவை, மேற்குத்தொடர்ச்சி மலையடிவார கிராமப் பகுதிகளில் அவ்வப்போது உணவு, குடிநீர் தேடி புகுவது வாடிக்கையாகி விட்டது. மேலும் வனப்பகுதி சாலையோரங்களில் காட்டெருமை, மிளா மற்றும் மான் உள்ளிட்டவை சுற்றித்திரிவதை சுற்றுலா பயணிகள் கண்டுகளித்துள்ளனர்.

நேற்று முன்தினம் பாபநாசம் வனப்பகுதி சாலையில் காட்டெருமைகள் கூட்டமாக சுற்றித் திரிந்துள்ளன. இதனை காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு சென்ற பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பார்த்து மகிழ்ந்துள்ளனர். பலரும் செல்போனில் படமெடுத்து ரசித்தனர்.

Related Stories: