உள்ளாட்சி தேர்தல் வெற்றிக்காக அதிமுகவினர் பணியாற்ற வேண்டும்: விழுப்புரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு

விழுப்புரம்: விழுப்புரத்தில் அதிமுக சார்பில் நடந்த  உள்ளாட்சித்தேர்தல் ஆலோசனைக்கூட்டத்தில் இணை  ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி  பழனிசாமி கலந்து கொண்டு பேசியதாவது:- விழுப்புரத்தில்  ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகத்தை துவக்கினோம். அதை மூடிவிட்டு, அண்ணாமலை பல்கலையோடு  இணைத்துவிட்டார்கள். நாங்கள் ஆட்சியிலிருக்கும்போது, திமுக ஆட்சியில்  துவங்கிய திட்டங்களாக இருந்தாலும் நாங்கள் அமல்படுத்தினோம்.

உள்ளாட்சித்தேர்தலில் அதிமுகவினர் கவனமோடு  இருக்கவேண்டும். அதிமுக வேட்பாளர் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. எனது  தொகுதிக்குட்பட்ட கெங்கவல்லி ஒன்றியத்தில் கடந்த உள்ளாட்சித்தேர்தலில் 13,  15 ஓட்டுவித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர்கள் தோல்வியடைந்தார்கள். அதிமுகவினர் ஒற்றுமையாக  இருந்து தேர்தல் பணியாற்றி வெற்றி பெற வேண்டும். இவ்வாறு பழனிசாமி பேசினார்.

Related Stories: