ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி

காஞ்சிபுரம்: ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடந்தது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடக்க உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீதம்  வாக்களிப்பதை வலியுறுத்தி ஏனாத்தூர் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியை, கலெக்டர் ஆர்த்தி தொடங்கி வைத்தார்.  கல்லூரி வளாகத்தில் இருந்து ஏனாத்தூர் வரை வாக்களிப்பது குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி மாணவ, மாணவிகள் சென்றனர்.

முன்னதாக, கல்லூரி மாணவர்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள், 3ம் பாலினத்தவர்கள் ஆகியோர் கலெக்டர் தலைமையில் வாக்காளர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியில் மகளிர் திட்ட இயக்குநர் சீனிவாச ராவ், சமூக நல அலுவலர் சங்கீதா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சற்குணா, சங்கரா கலை அறிவியல் கல்லூரி முதல்வர் வெங்கடேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories:

>