காஞ்சிபுரம் மாவட்டத்தில் 109 பதவிகளுக்கு கட்சி சின்னத்தில் போட்டி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், 109 பதவிகளுக்கு கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் உள்ள 2321 பதவிகளுக்கு 8603 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதில் 91 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 1327 வேட்பாளர்கள் வாபஸ் பெற்றனர்.  149 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதன்மூலம் உள்ளாட்சி தேர்தல் களத்தில் 7036 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் கட்சி சின்னத்தில் மாவட்ட ஊராட்சிக்குழு மற்றும் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் போட்டியிடுகின்றனர். திமுக கூட்டணியில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 11 மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்களுக்கு திமுக 9 இடங்களிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி 1 இடத்திலும், காங்கிரஸ் கட்சி 1 இடத்திலும் போட்டியிடுகிறது.

ஊராட்சி ஒன்றியக்குழுவில் உள்ள 98 உறுப்பினர் பதவிகளுக்கு திமுக 83 இடங்களிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி 7  இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 6 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2 இடங்களிலும் போட்டியிடுகின்றன. இதேபோன்று மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பதவிக்கான 11 இடங்களிலும் அதிமுக போட்டியிடுகிறது. ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கான 98 பதவிகளில் 89 இடங்களில் அதிமுகவும், பாஜ 6 இடங்களிலும், புரட்சி பாரதம் கட்சி 2 இடங்களிலும், ஜி.கே.வாசன் தலைமையிலான தமிழ்மாநில காங்கிரஸ் 1 இடத்திலும் போட்டியிடுகிறது.

Related Stories: