ஆவணங்களின்றி கொண்டு சென்ற 240 டவல்கள் பறிமுதல்

உத்திரமேரூர்: உள்ளாட்சி தேர்தலையொட்டி, உத்திரமேரூர் அருகே பறக்கும்படை அதிகாரிகள் நடத்திய சோதனையில், ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற 240 டவல்கள் பறிமுதல் செய்யப்பட்டன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து தேர்தல் விதிகள் அமலுக்கு வந்தன. இதையடுத்து, உத்திரமேரூர் சுற்று வட்டாரப் பகுதி முழுவதும் சுழற்சி முறையில் பறக்கும் படையினர் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் உத்திரமேரூர் அடுத்த காவனூர் புதுச்சேரி கூட்டுச்சாலையில் சிறப்பு வட்டாட்சியர் சத்யா தலைமையில் பறக்கும் படையினர் நேற்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது உத்திரமேரூர் நோக்கி சென்ற காரை மறித்து, சோதனையிட்டனர். அதில், உரிய ஆவணங்களின்றி சுமார் ₹9,600 மதிப்பிலான 240 டவல்கள் இருந்தது. அதனை, அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Related Stories:

>