வாடகை கட்டிடத்தில் இயங்கும் நியாய விலை கடைகளுக்கு சொந்த கட்டிடம் அமைக்க ஏற்பாடு: அமைச்சர் தகவல்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை பணிகள் தொடர்பாக, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட அலுவலர்களுடான ஆய்வுக்கூட்டம் ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலையில், உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி தலைமையில் நேற்று நடைபெற்றது. பின்னர், அமைச்சர் அர.சக்கரபாணி செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது: முதல்வர், ஆளுநர் உரையில் குறிப்பிட்டபடி, குடும்ப அட்டை வேண்டி, தகுதியுள்ளவர்கள் யார் விண்ணப்பத்தாலும் 15 நாட்களுக்குள் குடும்ப அட்டை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். அதனடிப்படையில், மாவட்டத்தில் 1362 விண்ணப்பங்கள்  நிலுவையில் உள்ளது. இதனை விரைந்து பரீசிலிக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 8,000  நியாயவிலைக் கடைகள்  வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகின்றன. அதற்கு சுமார் ரூ.18 கோடி வாடகை செலுத்தப்பட்டு வருகிறது. இதற்கு தீர்வு காணும் விதமாக ஊரக வளர்ச்சி முகமை மூலமாக சொந்த கட்டிடம் கட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு கூறினார்.  ஆய்வுக்கூட்டத்திற்கு முன்பாக,, 20 நபர்களுக்கு மின்னணு குடும்ப அட்டைகளை  ஊரக தொழில் துறை அமைச்சர் .தா.மோ.அன்பரசன் முன்னிலையில், அமைச்சர்.

அர.சக்கரபாணி  வழங்கினார். இவ்வாய்வுக்கூட்டத்திற்கு பிறகு, செங்கல்பட்டு வட்டம், ஆலப்பாக்கம் ஊராட்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு நியாய விலைக்கடை மற்றும் திம்மாவரம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வட்ட சேமிப்பு நேரடி கொள்முதல் நிலையத்தை ஆய்வு செய்தனர்.

ஆத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தினை ஆய்வு செய்து 7 பயனாளிகளுக்கு 8லட்சத்து 29,418 மதிப்பீட்டில் கடனுதவி வழங்கினர். இந்நிகழ்ச்சியில், கூட்டுறவு மற்றும் உணவுபொருள் பாதுகாப்புத் துறை, அரசு கூடுதல் தலைமைச்செயலாளர் முகமது நசிமுத்தின், உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர்.ஆர்.ஆனந்தகுமார் கலெக்டர் ராகுல் நாத், உத்திரமேரூர் எம்எல்ஏ.க.சுந்தர் தாம்பரம் எம்எல்ஏ .எஸ்.ஆர்.ராஜா பல்லாவரம் எம்எல்ஏ த .இ.கருணாநிதி, செங்கல்பட்டு எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன்,  சோழிங்கநல்லூர் எம்எல்ஏ எஸ்.அரவிந்த்ரமேஷ், திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலுவலர் .இரா.மேனுவல்ராஜ் கலந்து கொண்டனர்.

Related Stories: