தேர்தல் வாக்குறுதிப்படி இலவசமாக தராதது ஏன்? 95 சதவீதம் பேரிடம் செல்போன் இருந்ததால்தான் கொடுக்கல: திண்டுக்கல் சீனிவாசன் ‘‘பகீர்’’ விளக்கம்

திண்டுக்கல்: கடந்த 2016 தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்த இலவச செல்போன்களை மக்களுக்கு வழங்காதது ஏன் என்பது குறித்து திண்டுக்கல் சீனிவாசன் விளக்கம் அளித்தார். தமிழக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி, அதிமுக சார்பில் திண்டுக்கல்லில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அளித்த பேட்டியில், ‘‘அதிமுக கொடியை காரில் கட்டியுள்ள சசிகலா மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். இரண்டு தலைவர்கள் தலைமையில் அதிமுக சிறப்பாக செயல்படுகிறது.

2016 பொதுத்தேர்தலின்போது அதிமுக தேர்தல் அறிக்கையில் தமிழகத்திலுள்ள குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்குக்கும் இலவசமாக செல்போன் வழங்கப்படும் என கூறப்பட்டிருந்தது. ஏன் வழங்கவில்லை என கேட்கின்றனர். பொதுமக்கள் மத்தியில் விசாரணை செய்து பார்த்ததில் செல்போன் தேவை இல்லை என்பதால் வழங்கவில்லை. தமிழகத்தில் நூற்றுக்கு 95 சதவீதம் பேர் அலைபேசி வைத்திருந்ததால் கொடுப்பது வீணாகக்கூடாது என்பதால் நாங்கள் வழங்கவில்லை’’ என்றார்.

Related Stories: