விவசாய நிலத்தில் மர்மப் பொருள் பொதுமக்கள் பீதி

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் அடுத்த வடக்குபட்டு வயல்வெளியில், நேற்று மாலை மண்ணில் புதைத்த நிலையில் மர்ம பொருட்கள் காணப்பட்டன. அந்த வழியாக சென்ற விவசாயிகள் அதை பார்த்து அதிர்ச்சியைடந்தனர். தகவலறிந்து, திருக்கழுக்குன்றம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, ஆய்வு செய்தனர். இரவு 7.30 மணியானதால், இருள் சூழ்ந்து காணப்பட்டது. இதனால், அந்த பொருளை என்னவென்று கண்டுபிடிக்க போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டது.

விசாரணையில் அதில்,  ‘கப்பலுக்கு திசை கட்டுவதற்கும், பாதுகாப்புக்காகவும் கப்பல் படையினர் பயன்படுத்தும் பொருளாக இருக்கலாம் என தெரிந்தது. அந்த மர்ம பொருள் நிலத்தில் குத்திய நிலையில், இருந்ததால் பராஷூட் போன்ற குடை மாதிரியாக காணப்பட்டது. இதன் எடை சுமார் 10 கிலோ இருக்கும் என கூறப்படுகிறது.

Related Stories:

>