வாகன விபத்தில் 3 பேர் பலி

திருக்கழுக்குன்றம்: சோழிங்கநல்லூரை சேர்ந்த ஒரு குடும்பத்தினர், தங்களது உறவினர்களுடன் 20க்கும் மேற்பட்டோர் திருக்கழுக்குன்றம் அடுத்த வல்லிபுரத்தில் கன்னி கோயிலுக்கு நேற்று முன்தினம் வேனில் சென்றனர். அங்கு வழிபாடு முடிந்து வீட்டுக்கு புறப்பட்டனர். திருக்கழுக்குன்றம் அடுத்த கருங்குழி சாலை பகுதியில் வேன் சென்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென வேன், டிரைவரின் கட்டுபாட்டை இழந்து, எதிரில் வந்த 3 பைக்குகள் மீது மோதியது. அதில், பைக்குகளில் வந்த திருக்கழுக்குன்றம் அடுத்த பொன்பதர்கூடத்தை சேர்ந்த அரிகிருஷ்ணன் (52), மோசிவாக்கம் சடகோபன் (45) மற்றும் ஒரு முதியவர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். மேலும், 3 பேர் சிகிச்சை பெறுகின்றனர். புகாரின்படி திருக்கழுக்குன்றம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories:

>