பெரும்பாறை வனப்பகுதியில் காட்டு யானைகளை விரட்டும் பணி தீவிரம்

பட்டிவீரன்பட்டி:பெரும்பாறை, தாண்டிக்குடி, மங்களங்கொம்பு, தடியன்குடிசை பெரியூர், சேம்பிலியூத்து, பள்ளத்துக்கால்வாய் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட வனப்பகுதியை ஒட்டிய விளைநிலங்களுக்குள் காட்டுயானைகள் அடிக்கடி புகுந்து விவசாய பகுதிகளை நாசம் செய்து வருகின்றது. குறிப்பாக மலைப்பயிர்களான வாழை, ஆரஞ்சு மற்றும் சவ்சவ், பீன்ஸ் போன்ற காய்கறிகளை கபளீகரம் செய்து விடுகின்றது. காட்டு விலங்குகள் விளைநிலங்களுக்குள் வராமல் இருக்க சோலார் வேலி, முள்வேலியை மலைத்தோட்ட விவசாயிகள் அமைத்துள்ளனர்.

ஆனால் அதையும் உடைத்துவிட்டு விளைநிலங்களுக்குள் புகுந்து விடுகின்றது. இந்த காட்டுயானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலைத்தோட்ட விவசாயிகளும், பொதுமக்களும் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் வத்தலக்குண்டு வனச்சரகர் ஆறுமுகம் தலைமையில் வனவர் ஜலில் மற்றும் வனக்காப்பாளர்கள், வேட்டைத் தடுப்பு காவலர்கள், வனப்பகுதிக்குள் பட்டாசு வெடித்து காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: