தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனுக்களை மார்ச் 12ஆம் தேதி முதல் தாக்கல் செய்யலாம்: தலைமை தேர்தல் ஆணையர்

புதுடெல்லி: தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி, ஆகிய 5 மாநிலங்களில் உள்ள சட்டப்பேரவைகளின் ஆயுட் காலம்  விரைவில் நிறைவடைய உள்ளதால் அம்மாநிலங்களில் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. தமிழக சட்டப்பேரவையின்  ஆயுட்காலம் வரும் மே மாதம் 24-ம் தேதியுடன் நிறைவு பெரும் நிலையில் அதற்குள் தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் தீவிர  நடவடிக்கையில் ஈடுபட்டது.

இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, கொரோனா உச்சத்தில் இருந்த 2020-ல் சட்டப்பேரவை தேர்தலைத் நடத்தியுள்ளோம். தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. கொரோனா அச்சுறுத்தல் இருந்தாலும் சுகாதாரத்துறை மூலம் பிரச்னைகளை சமாளித்து வருகிறோம். தேர்தலை சுமுகமாக நடத்துவதில் மருத்துவர்கள், செவிலியர்கள், அதிகாரிகளுக்கு பெரும் பங்கு உள்ளது என்றும் தெரிவித்தார். தேர்தல் பணி ஈடுபடும் ஊழியர்கள், கொரோனா முன்களப் பணியாளர்களுக்கு தலைவணங்குகிறோம். பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் முந்தைய தேர்தல்களை விட 57 % வாக்குகள் பதிவாகின. பீகாரில் பெருமளவு பெண்கள் வாக்களித்தனர் என்றும் தெரிவித்தார்.

80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்களிக்கும் முறை அமல்படுத்தப்படுகிறது என்று தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். 80 வயதுக்கு மேற்பட்டோர் விருப்பப்பட்டால் தபால் வாக்களிக்கலாம்; இல்லை நேரில் வாக்களிக்கலாம்.

கொரோனா அச்சுறுத்தல் கருதி வாக்குப்பதிவு நேரம் ஒரு மணி நேரம் அதிகரிக்கப்படும்.

வாக்குப்பதிவு நேரத்தை அதிகரிப்பது பற்றி மாவட்ட தேர்தல் அதிகாரி முடிவெடுத்து கொள்ளலாம்

வீடு வீடாக சென்று அரசியல் கட்சியினர் 5 பேர் மட்டுமே வாக்கு கேட்கலாம்: சுனில் அரோரா

வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே வீடு வீடாக சென்று பரப்புரை மேற்கொள்ளலாம்: தேர்தல் ஆணையர்

வேட்புமனு தாக்கலின் போது 2 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்

தமிழகத்தில் தேர்தல் பார்வையாளராக தேவந்திர குமார், அலோக் வர்தன் நியமனம்: சுனில் அரோரா

தேர்தல் பணியாளர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும்

புதுச்சேரியில் தொகுதிக்கு ரூ.22 லட்சம், மற்ற 4 மாநிலங்களில் ரூ.30.8 லட்சம் தேர்தல் செலவு அனுமதி: தலைமை தேர்தல் ஆணையர்

குற்றப்பின்னணி கொண்ட வேட்பாளர்கள் விவரங்களை ஊடகங்களில் வெளியிட வேண்டும்

அசாமில் மார்ச் 2 வேட்பு மனுதாக்கல் ஆரம்பம்

மே 2ஆம் தேதி தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் வெளியாகும்: தலைமை தேர்தல் ஆணையர்

தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி வாக்குப்பதிவு, மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை: தலைமை தேர்தல் ஆணையர்

அசாமில் மார்ச் 2 வேட்பு மனுதாக்கல் ஆரம்பம்

மே 2ஆம் தேதி தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் வெளியாகும்: தலைமை தேர்தல் ஆணையர்

தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி வாக்குப்பதிவு, மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை: தலைமை தேர்தல் ஆணையர்

கேரளாவில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும்

புதுச்சேரியில் 30 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது

மேற்குவங்க மாநிலத்தில் 294 சட்டமன்ற தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக தேர்தல்

அசாம் மாநிலத்தில் 3 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும்

அசாம் மாநிலத்தில் 126 தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது

அசாம் மாநிலத்தில் முதற்கட்ட தேர்தல் மார்ச் 27ஆம் தேதி நடைபெறும்

ஏப்ரல் 1ஆம் தேதி 2ஆம் கட்ட தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி 3ஆம் கட்ட தேர்தல் நடைபெறும்

கேரளாவில் 140 தொகுதிகளுக்கு ஏப்ரல் 6ல் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும்

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனுக்களை மார்ச் 12ஆம் தேதி முதல் தாக்கல் செய்யலாம்: தலைமை தேர்தல் ஆணையர்

கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு ஏப்ரல் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும்

Related Stories: