லெஸ்பியன் என்று பேச தயக்கமாக இருந்தது: பிரிகிடா சகா

சென்னை: கேஜேபி டாக்கீஸ் சார்பில் கே.ஜே.பாலாமணி மார்பன் தயாரிப்பில் விக்னேஷ் கார்த்திக் எழுதி இயக்கி நடிக்க, விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் இணைந்து வழங்கிய ‘ஹாட்ஸ்பாட் 2மச்’ என்ற படத்தின் வெற்றியை படக்குழுவினர் கொண்டாடினர். இதில் அஸ்வின் குமார் லட்சுமிகாந்தன், பிரியா பவானி சங்கர், எம்.எஸ்.பாஸ்கர், தம்பி ராமய்யா, ஆதித்யா பாஸ்கர், ரக்‌ஷன், பவானிஸ்ரீ, பிரிகிடா சகா, சஞ்சனா திவாரி, ‘ஆதித்யா’ கதிர், விஜய் அமர் நடித்திருந்தனர். ஜெகதீஷ் ரவி, ஜோசப் பால் ஒளிப்பதிவு செய்தனர். சதீஷ் ரகுநாதன் இசை அமைத்தார்.

அப்போது சஞ்சனா திவாரி பேசுகையில், ‘இப்படத்தின் மீதும், கதாபாத்திரங்களின் மீதும் ரசிகர்கள் அன்பு செலுத்துவதை பார்த்து சந்தோஷமாக இருக்கிறது. இதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை’ என்றார். பவானிஸ்ரீ பேசுகையில், ‘நல்ல கன்டென்ட் இருந்தால், ரசிகர்கள் கண்டிப்பாக வரவேற்பு தருவார்கள் என்பதற்கு இப்படம் மீண்டும் ஒரு சாட்சியாக மாறி வெற்றிபெற்றுள்ளது’ என்றார். பிரிகிடா சகா பேசும்போது, ‘இப்படத்தில், ‘நான் ஒரு லெஸ்பியன்’ என்ற வசனத்தை பேச தயக்கமாக இருந்தது. உணர்வு என்பது உணர்வுதான். இதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். சமூகத்தில் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற ஒரு மதிப்பீடு இருக்கிறது. ஆனால், இதுகுறித்து எனது கேரக்டர் பேசியிருக்கிறது என்பதை நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. உடலுக்குள் நடக்கும் மாற்றத்தை புரிந்துகொள்ள வேண்டும். பெற்றோர் புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது நல்ல விஷயமாக இருந்தது’ என்றார்.

Related Stories: