எல்லா மொழியையும் கற்றுக்கொள்ள வேண்டும்: ராசி கன்னா

மும்பை: இந்தியாவிலுள்ள பல்வேறு மொழிப் படங்களில் நடித்​து வரும் ராசி கன்​னா, பல படங்களில் சொந்தக்குரலிலும் பாடியிருக்கிறார். இந்த நிலையில் அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு:
நான் எந்த மொழிப் படத்தில் நடிக் கிறேனோ, உடனே அந்த மொழியை கற்றுக்கொண்டு பேசுவதில் அதிக கவனம் செலுத்துவேன். அதிக மொழிகளை தெரிந்துகொள்வது எனக்​கு மிகவும் பிடிக்​கும். அதை ஒரு வேலை​யாகவே செய்கிறேன். இந்​தி, ஆங்​கிலம், தெலுங்​கு, தமிழ், பஞ்சாபி, பெங்காலி ஆகிய மொழிகளில் சரளமாக பேசுவேன். தவிர, ஒவ்​வொரு மொழியிலும் வித்தியாசமான கேரக்டரில் நடிக்க வேண்டும் என்​பது எனது ஆசை. ஒரு நல்ல கேரக்டரில் நடிக்கும்போது, அங்கு மொழி என்பது அடுத்த பட்சமே. ரசிகர்களுடன் பேச அந்தந்த ​மொழியை கற்பது மிக அவசியம். அதனால்எந்தெந்த மொழி​படத்தில் நடித்தாலும், அந்த மொழியை உடனே நான் கற்​றுக்​கொள்​கிறேன்.

பவன் கல்​யாண் நடிக்கும் ‘உஸ்​தாத் பகத்​சிங்’ படத்​தில் நடிக்க வாய்ப்பு வந்​த​போது, கதை கேட்​காமல் நான் கால்ஷீட் கொடுத்தேன். அதாவது, இதில் நடிக்கும் வாய்ப்பை பவன் கல்​யாணுக்​காக ஏற்​றுக்​கொண்​டேன். படப்​பிடிப்​பில் ஏராள​மான ரசிகர்​கள், ‘பவனிஸம்’ என்று எழு​தப்பட்ட டி-சர்ட் அணிந்​து ​வந்​தனர். அவரது தீவிர​ ரசிகர்களை நேரில் பார்த்து வியந்​தேன். ஒவ்​வொரு​வரும் சிறந்த படத்​தை கொடுக்க வேண்​டும் என்​று​ நினைத்துதான் கடுமையாக உழைக்​கின்றனர். அனை​வரும் இந்​திய திரையுலகிற்கு தங்களின் மிகச்சிறந்த பங்​களிப்பை வழங்கி வருகின்றனர். அதனால், பல்​வேறு மொழிகளில் நான் பணியாற்றி​னாலும், எந்தஒரு வித்​தி​யாசத்​தை​யும் நான் பார்க்க​வில்​லை.

இந்தியில் ரன்​பீர் கபூர், விக்கி கவுஷல் போன்ற ஹீரோக்கள் வித்​தி​யாசமான கதைகளை தேர்வு செய்து நடிக்​கின்றனர். அவர்​களு​டன் இணைந்து நடிக்க ஆசைப்படுகிறேன். இயக்​குனர் சஞ்​சய் லீலா பன்​சாலி பெண்களுக்கு அதிக முக்​கி​யத்​து​வம் கொடுப்பார் என்பதால், அவரது இயக்​கத்​தில் ஒரு பாடல் காட்சியிலாவது நடிக்க வேண்​டும் என்று ஆசைப்படு ​கிறேன். இந்த லிஸ்ட்​டில் ரிஷப் ஷெட்​டி, எஸ்.எஸ்.ராஜமவுலியும் இருக்​கின்றனர். அவர்கள் இயக்கும் படங்களில் நடிக்க நான் காத்திருக்கிறேன்.

Related Stories: