தூத்துக்குடி தொழிலதிபர் குகன் சக்கரவர்த்தியார், மனைவியால் மனவேதனை அடைந்து, கடற்கரையில் தனிமையில் புலம்புகிறார். அப்போது தற்கொலைக்கு முயற்சிக்கும் முன்னாள் காதலியை காப்பாற்றி, தனி வீட்டில் குடியமர்த்துகிறார். பிறகு அவருக்காக ஒரு கொலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு, பிறகு அவருடன் சேர்ந்து வாழ்கிறார். குகன் சக்கரவர்த்தியாரால் கொல்லப்பட்ட நபர், அவரது காதலியை போனில் தொடர்புகொண்டு மிரட்டு கிறார். பிறகு என்ன நடக்கிறது என்பது மீதி கதை.
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், ஒளிப்பதிவு, இசை உள்பட 21 துறைகளை தனியாக கையாண்டு ஹீரோவாக வரும் குகன் சக்ரவர்த்தியார், கேரக்டருக் கேற்ப நடித்துள்ளார். சண்டைக் காட்சிகளில் ஆவேசமாக அடித்துள்ளார். காதலியாகவும், மனைவியாகவும் வரும் இரு ஹீரோயின்களும் அவருக்காக உருகுகின்றனர். வாசு விக்ரம், வையாபுரி, பொன்னம்பலம் நன்கு நடித்துள்ளனர். மற்றவர்கள் யாரும் மனதில் பதியவில்லை.
ஒளிப்பதிவும், இசையும் பலம் சேர்த்துள்ளன. ஆக்ஷன், சஸ்பென்ஸ், அமானுஷ்யம், பேமிலி சென்டிமெண்ட், அரசியல் என்று, பல்வேறு ஜானர்களில் படம் பயணிப்பது குழப்பை ஏற்படுத்துகிறது. ஒன்மேன் ஆர்மியாக எல்லா பொறுப்பு களையும் ஏற்று செயல்பட்டிருக்கும் குகன் சக்கரவர்த்தியார், கிளைமாக்சில் மறைந்த அப்துல் கலாமின் கருத்துகளால் மனம் மாறி பேசுவது ஆறுதல். பட உருவாக்கத்தில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்க வேண்டும்.
